Home » Tamil News » இதே நாள்.. கடந்த வருடம்.. தோனியின் ஓய்வு அறிவிப்பை நினைவுகூர்ந்த சிஎஸ்கே!

இதே நாள்.. கடந்த வருடம்.. தோனியின் ஓய்வு அறிவிப்பை நினைவுகூர்ந்த சிஎஸ்கே!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி இரவு 7.29 மணிக்கு தன்னுடைய ஓய்வை அறிவித்தார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்து இன்றுடன் ஒராண்டு நிறைவு பெறுகிறது. அந்த நிகழ்வை குறிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

இந்த வீடியோவில் எல்.பாலாஜி, ஷேன் வாட்சன்,ரெய்னா, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட வீரர்கள் தோனி குறித்து பேசியுள்ளனர். அந்த வீடியோவின் தொடக்கத்தில் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15, 7.28 மணியில் இருந்து கவுன்டவுன் தொடங்குகிறது. அதன்பின்னர் வீரர்கள் தோனி குறித்து பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. கடந்த முறை தோனி தன்னுடைய ஓய்வை அறிவித்தப் போது சிஎஸ்கே அணியுடன் இருந்தார். 

 

தோனி தன்னுடைய ஓய்வை அறிவித்த சில மணி நேரங்களில் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார். அவர்கள் இருவரும் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகின்றனர். தற்போது இந்தாண்டு இருவரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க யுஏஇ சென்றுள்ளனர். 

 



ஐபிஎல் தொடரின் முதல் பாதி சென்னை அணிக்கு நன்றாகவே அமைந்தது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை அணி 5 வெற்றி மற்றும் 2 தோல்விகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் வரும் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் சென்னை அணி தன்னுடைய முதல் போட்டியில் செப்டம்பர் 19ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அதன்பின்னர் பெங்களூரு(செப்டம்பர் 24), கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(செப்டம்பர் 26), சன்ரைசர்ஸ்(செப்டம்பர் 30), ராஜஸ்தான்(அக்டோபர் 2), டெல்லி(அக்டோபர் 4), பஞ்சாப் கிங்ஸ்(அக்டோபர் 7) ஆகிய போட்டிகளில் பங்கேற்க உள்ளது. 

மேலும் படிக்க:  டேபிள் டென்னிஸில் அசரடித்த ஃபெடரர் – வைரல் வீடியோ !




Source link

x

Check Also

Here is the life story of Actor Nedumudi Venu

நடிகர் நெடுமுடி வேணு மரணம் – மலையாளம், தமிழ் படங்களில் நடித்தவரின் வாழ்க்கை பயணம்

Art Culture bbc-BBC Tamil By BBC News தமிழ் | Updated: Monday, October 11, 2021, 18:40 ...