Home » Tamil News » டோக்கியோ ஒலிம்பிக்: நாளை ஆரம்பம்…எங்கு, எப்படி பார்க்க முடியும்? முழு விபரம் இதோ!

டோக்கியோ ஒலிம்பிக்: நாளை ஆரம்பம்…எங்கு, எப்படி பார்க்க முடியும்? முழு விபரம் இதோ!

32ஆவது ஒலிம்பிக் போட்டிகள், ஜப்பன் தலைநகர் டோக்கியோவில் நாளை முதல் துவங்கி நடைபெறவுள்ளது. போட்டிகள் மாலை 4:30 மணிக்குக் கோலாகலமாகத் துவங்கவுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக மொத்தம் 1000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா சாதனை:

இந்தியாவிலிருந்து மொத்தம் 71 ஆண்கள், 56 பெண்கள் என மொத்தம் 127 பேர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். இந்தியா சார்பில் அதிக எண்ணிக்கையிலான வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் கலந்துகொள்வது இதுதான் முதல்முறை. இதற்குமுன் 2016-ல் ரியோடி ஜெனிவாவில் 116 இந்தியர்கள் கலந்துகொண்டே சாதனையாக இருந்தது.

போட்டியை எதில் காணலாம்:

போட்டிகள் TEN 1 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். இதில், ஆங்கிலத்தில் வர்ணனை செய்யப்படும். தூர்தஷனிலும் ஒலிம்பிக் போட்டிகள் நேரலை செய்யப்படும். இதில் இந்தியில் கமெண்ட்ரி செய்யப்படும். TEN 4-ல் தமிழில் வர்ணனை செய்யப்பட்டும்.

முதல்நாள் போட்டி:

துவக்க நாளில் வில்வித்தைக்கான தகுதிச் சுற்று மட்டுமே நடைபெறவுள்ளது. பெண்களுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நாளை காலை 5:30 மணிக்கும், அதனைத் தொடர்ந்து ஆண்களுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் காலை 9:30 மணிக்கும் துவங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Source link

x

Check Also

‘ரஞ்சித் அண்ணா படத்துல பாடுனது சந்தோஷம்!7’ – கானா முத்து

‘புளி மாங்கா புளிப் பாட்டு’ பாடுனது நான்தான். ஆனா, பாட்டு ரீச் ஆனளவுக்கு நான் ரீச்சாகல. சொல்லப்போனா ஒரு பிரைவேட் ...